Posts

Showing posts from November, 2018

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Image
காலையில் எழுந்தவுடன் தண்ணி குடிக்கும் பழக்கம் நல்லதா அப்படி அதிகமாக குடித்தால் என்ன நடக்கும் என்று நாம் மனதில் எழும் கேள்வியாகும்.நமக்கு எப்போது தாகம் எடுக்கிறதோ அப்போதும் மட்டும் தாகம் தீரும் அளவுக்கு தண்ணீர் பருகினால் போதும் அதிகமாக குடிக்க வேண்டாம். சிலருக்கு  தண்ணீர் தாகமே வராது அவர்களுக்கு கபம் அதிகஅளவு இருக்கும். பித்தம் அதிகமாக இருத்தல் அதிகமாக தண்ணீர் பருகுவார்கள்  சுத்தமாக தாகமே ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.  சாப்பிட்ட அனைத்தும் செரிமானம் ஆவதற்கு வயிற்றில் சிறிது வெப்பம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் செரிமானம் அடைய எளிதாக இருக்கும். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிப்பதால் வெப்பம் குறைத்து செரிமான கோளாறு ஏற்பட செய்யும். தாகம் ஏற்பட்டு தண்ணீர் அருந்த தவறினால் முடி உதிர்வு, கண்ணில் கரு வளையம், நீர் சத்து குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு காலையில் தண்ணீர் குடித்தால் தான் காலை கடன்களை முடிக்க முடியும் அவ்வாறு இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகவும் இயற்கையாக நடக்கும் சில விஷயங்களை தண்ணீர் உதவியுடன் நடக்க செய்தால் உடலில் பிரச்சனை என்றுதானே அர்த்தம்.